News July 24, 2024
லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

திருவாரூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் (22), இவர் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழபணங்குடி அருகே லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
திருவாரூர்: மது போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் நேற்று இரவு கோட்டூர் அரசு மதுபானக் கடையில் மதுவை வாங்கிக் கொண்டு அடப்பாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் மதகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இந்நிலையில், மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News March 8, 2026
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் கடன் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “ஏதேனும் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன் அதன் மதிப்புரை அதிகாரப்பூர்வ உரிமங்களை சரிபார்க்கவும் கடன் வழங்குவதற்கு முன் பணம் கேட்கும் செயல்களை தவிற்குமாறும், அது தொடர்பாக வழங்கப்படும் சலுகைகளை ஏற்க வேண்டாம்.” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.7) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


