News July 24, 2024

தமிழகத்திற்கு 7 மடங்கு கூடுதல் நிதி: ரயில்வே அமைச்சர்

image

2009-2014ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஒதுக்கியதை விட, தமிழகத்திற்கு 7 மடங்கு கூடுதல் நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். தமிழக கட்சிகளின் புகாருக்கு பதிலளித்து இதனை தெரிவித்த அவர்,
தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் திட்டத்தை ரத்துசெய்யுமாறு தமிழக அரசு கடிதம் கொடுத்ததாகவும் கூறினார்.

Similar News

News March 25, 2026

ஏசி விலை ₹6,000 வரை உயர்கிறது

image

ஏசி விலைகள் 8% முதல் 12% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 1.5 டன் ஏசி தற்போது ₹50,000 எனில், இனி ₹50,400 – ₹56,000 வரை விற்பனை செய்யப்படும். ஜனவரி முதல் அமலுக்கு வந்த புதிய BEE ஆற்றல் மதிப்பீட்டு விதிமுறைகள், உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளன. இது தவிர, சர்வதேச சந்தையில் தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு நிறுவனங்களின் மீதான சுமையை அதிகரித்துள்ளன.

News March 25, 2026

அணு ஆயுதம்.. என் முடிவே சரி: கிம் ஜாங் உன்

image

ஈரான் மீதான USA தாக்குதல், வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பது சரிதான் என்பதை நிரூபிக்கிறது என கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 2019-ல் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்ட அவர், USA-ன் அழுத்தத்தையும், இனிமையான பேச்சையும் நிராகரித்தது சரியே எனவும் பேசியுள்ளார். மேலும், அணு ஆயுத பலம் இல்லாத நாடுகள் USA-க்கு இலக்காக மாறும் என்ற அவருடைய நம்பிக்கை உறுதியாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

News March 25, 2026

RCB-ன் பெயர் மாறுகிறதா?

image

உரிமம் மாறியுள்ள நிலையில், RCB அணியின் பெயர் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Royal Challengers என்பது விஜய் மல்லையாவின் பிராண்டின் பெயர் என்பதால், தற்போது உரிமைத்தை வாங்கியுள்ள ஆதித்யா பிர்லா நிறுவனம் அந்த பெயரை மாற்றலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், RCB என்பது வெறும் அணியின் பெயரல்ல, அது ரசிகர்களின் எமோஷன் எனவும் பெயரை மாற்ற வேண்டாம் என்றும் RCB ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!