News July 24, 2024
CBI அமைப்புக்கு ₹951 கோடி நிதி ஒதுக்கீடு

நாட்டின் முக்கிய புலனாய்வு நிறுவனமான CBI-க்கு ₹951 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24 நிதியாண்டை விட (₹968 கோடி) 1.79% குறைவாகும். CBI-இன் பயிற்சி மையங்களின் தொழில்நுட்பம் & தடயவியல் ஆதரவு பிரிவுகளை நவீனப்படுத்துவது, அதிகாரிகளுக்கான குடியிருப்பு கட்டடங்கள், அலுவலகங்களை வாங்குவது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இந்த தொகை செலவிடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 13, 2026
வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. சற்றுமுன் டெபாசிட்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில், PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு இன்று டெபாசிட் செய்துள்ளது. அசாமில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற PM மோடி, இதற்கான நிதியை விடுவித்துள்ளார். இதன்மூலம், நாடு முழுவதிலும் 9.32 கோடி நலிவடைந்த விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். KYC அப்டேட், நில ஆவணம் சமர்ப்பிப்பு உள்ளிட்டவற்றை நிறைவு செய்யாத பயனாளிகளுக்கு இந்த தவணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
காவ்யா மாறனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

The Hundred தொடருக்காக பாக். வீரர் அப்ரார் அகமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது விமர்சனத்தை பெற்றுள்ளது. ‘Shame on you kavya maran’ என்ற ஹேஷ்டேக் X தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் நோக்கில் மோசமாக சித்தரித்த மீமை அப்ரார் ஷேர் செய்திருந்தார். முன்னதாக, <<19370151>>CSK<<>>-க்கு சன் குழுமம் நோட்டீஸ் அனுப்பியதும் விமர்சனத்தை பெற்றது.
News March 13, 2026
அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. பரபரப்பு தகவல்

திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு செல்லும் முடிவை தவெக எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த நடத்திய மா.செ., கூட்டத்தில், கூட்டணி செல்வதால் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் வெல்ல வேண்டும் என பலரும் கூறினார்களாம். அத்துடன், கூட்டணியில் 50-60 சீட்கள்+விஜய்க்கு DCM பதவி கிடைத்தால் நல்லது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தனித்து போட்டியிடவும் அறிவுறுத்தினராம்.


