News July 24, 2024
அரசு பேருந்து கட்டணம் உயர்வு? அதிகாரப்பூர்வ விளக்கம்

மின்கட்டணத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திட்டமென பரவும் தகவல் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை எனவும் அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். மேலும், இதுபோன்ற தகவலை யாரும் பரப்ப வேண்டாம், மக்களும் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News March 5, 2026
தமிழக தேர்தல் எப்போது? வெளியான அப்டேட்

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை <<19301081>>வரும் 13-ம் தேதி<<>> ECI அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் போல் இம்முறை ஏப்ரலில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது.
News March 5, 2026
ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரை இறக்கிய ராமதாஸ்

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸின் உதவியாளரான ப.சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸுக்கு 2 MLA-க்கள் ஆதரவு உள்ள நிலையில் இந்த வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு மனுத்தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாகவே இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.


