News July 24, 2024
வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

ஜியோ நிறுவனம் 4000-த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் 300க்கும் மேற்பட்ட பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி சூலக்கரையில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
சிவகாசியில் பட்டாசு கடைகள் மூடல்

சிவகாசி பகுதியில் சுமார் 4000 பட்டாசு கடைகள் மூலமாக தீபாவளிக்கான பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டாசு விற்பனையில் முறையாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஏராளமான கடைகளில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வரி முறையாக செலுத்தாத பட்டாசு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே சோதனைக்கு பயந்து பெரும்பாலான பட்டாசு கடைகள் மூடப்பட்டது.
News October 15, 2025
விருதுநகர்: முதியவர் மீது போக்சோ வழக்கு

வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (70) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி மையத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து, நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி நேரில் விசாரித்து, பிறகு முதியவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சாத்துார் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 15, 2025
விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 2024ல் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போட்டோகிராபர் முருகேசன் (55) கைது செய்யப்பட்டார். இந்த போக்சோ வழக்கு ஸ்ரீவி. போக்சோ நீதிமன்றத்தில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.