News July 24, 2024
46 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் டிரான்ஸ்பர்

திருநெல்வேலி மாவட்ட அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நேற்று(ஜூலை 23) காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில் காலிப்பணியிடங்களுக்கு இட மாறுதலாகி செல்ல 46 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரும்பிய இடத்திற்கான டிரான்ஸ்பர் உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி வழங்கினார். தொடர்ந்து இன்று(ஜூலை 24) வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
Similar News
News March 4, 2026
நெல்லையில் சந்திர கிரகணத்தை பார்த்த மக்கள்

இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணியைத் தாண்டி சந்திர கிரகணம் நீடித்தது. இதை பார்வையிட நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6.30 மணி முதல் பொதுமக்கள் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் சந்திரன் தோற்றத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
News March 3, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலையில் அதிர்ச்சி தகவல்..!

நாங்குநேரியில் நேற்று இரவு இரண்டு பேர் கொலை செய்யபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் 2023ம் ஆண்டு மாணவர் சின்ன துரையை தாக்கிய வழக்கில் கைதான சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர் தற்போது நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
News March 3, 2026
நெல்லை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


