News July 24, 2024
திருநெல்வேலியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு குறைபாடு, ரேசன் கடையில் பாமாயில் பருப்பு சீராக வழங்காதது, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் இன்று(ஜூலை 24) அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் பேசினர். ஏராளமான தொண்டர்கள் கட்சி கொடிகள் மற்றும் கண்டன பதாதைகளுடன் பங்கேற்றனர்.
Similar News
News November 13, 2025
நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.
News November 13, 2025
நெல்லை: முக்கிய ரயில்கள் 9 நாட்களுக்கு ரத்து

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் ரயில்கள் இன்று 13-ம் தேதி மற்றும் 14 15 17 19 20 21 22 24 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE
News November 13, 2025
நெல்லை Southern Electronic நிறுவனத்தில் வேலை

திருநெல்வேலியில் உள்ள Southern Electronic என்ற நிறுவனத்தில் Mechanic Tv பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு ஐடிஐ படித்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த மாதம் 30ம் தேதிக்குள் இந்த <


