News July 24, 2024
3 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,760 சரிவு

பட்ஜெட் எதிரொலியாக சென்னையில் கடந்த 17ஆம் தேதி ஒரு சவரன் தங்கம், ₹55,360க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு சவரன் ₹51,920ஆக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு வாரத்தில் ₹52,000க்கு கீழ் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அதேபோல், கடந்த சனிக்கிழமையன்று ஒரு சவரன் ₹54,680 இருந்த நிலையில், 3 நாள்களில் ₹2,760 சரிவடைந்துள்ளது. இந்த விலை குறைவால் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை முடித்துவைப்பு

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முடிவடையவுள்ளது. இப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஜன.20 முதல் 4 நாள்கள் நடைபெற்றது. பின்னர் பிப்.17-ல் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாதம் 20-ம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில், 2021 முதல் பொறுப்பு வகிக்கும் திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இது முறைப்படி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
News March 14, 2026
சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.