News July 24, 2024
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி இல்லை: மத்திய அரசு

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட இதுவரை அனுமதி தரவில்லை என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. RTI சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கான காவிரி நீரை பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அணைக்கட்டியே தீருவோம் என பிடிவாதமாக உள்ளது.
Similar News
News March 22, 2026
கணவர்களுக்கும் கர்ப்பகால அறிகுறிகள் தோன்றும்

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, Mood Swings, தூக்கமின்மை & உடல் எடை அதிகரிப்பு ஆகியவை பொதுவானவை. ஆனால், கணவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்படும் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இதை Couvade Syndrome என டாக்டர்கள் சொல்கின்றனர். அதாவது, பார்ட்னருடன் ஏற்படும் வலுவான எமோஷனல் அட்டாச்மெண்ட் காரணமாக இது நிகழ்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். உலகளவில் 20% ஆண்களிடம் இந்த அறிகுறிகளை உணர்வதாக கூறப்படுகிறது.
News March 22, 2026
கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை: சரத்

கட்சியில் சேர்த்துவிட்டு உரிய பொறுப்பு கொடுக்காமல் ஒருவரை காக்க வைப்பது தவறு என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அவர், திருச்சி பொதுக்கூட்ட மேடையில் என்னுடைய போட்டோ கூட இல்லை என எனது ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர் என்றார். பாஜகவில் இணையும்போது தேசிய பதவி தருவதாக சொன்ன வாக்கை நிறைவேற்றவில்லை; பொறுப்புகள் கொடுத்தால் தான் பொறுப்போடு செயல்பட முடியும் எனவும் கூறியுள்ளார்.
News March 22, 2026
இந்த வார்த்தையை இப்போதும் கேட்பதுண்டா?

வெளியூர்களில் ஒருவர் நம்மை பார்க்கும்போதும், வரன் தேடும்போதும் ‘பூர்விகம்’ எது என்று முன்னர் கேட்பதுண்டு. ஆனால், தற்போதோ சொந்த ஊர் எது என கேட்கின்றனர். பூர்விகம் என்பது உங்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர், சொந்த ஊர் என்பது நீங்கள் பிறந்த ஊர். தற்போது பலரும் பணி காரணமாக வெளியூரில் சென்று செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால் பூர்விகம் என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது என கூறுகின்றனர். உங்கள் கருத்து?


