News July 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்லை ரவுடி வைரமணி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்லையை சேர்ந்த ரவுடி வைரமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளரான இவர், கடந்த 6 மாதங்களாக நெல்லை வீரவநல்லூரில் வசித்து வந்துள்ளார். சென்னையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கு, இக்கொலையில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனெவே, தென்மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளுக்கும் இக்கொலையில் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
Similar News
News April 9, 2026
ஆண்களிடம் குறையும் பாலியல் உணர்வு..

வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் ஆண்களிடம் பாலியல் உணர்வு(Libido) குறைந்து வருவது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மனச்சோர்வால், குறிப்பாக இளைஞர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து பாலியல் உந்துதலை நேரடியாக பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். BE ALERT!
News April 9, 2026
வாக்காளர்களை கடைசி நேரத்தில் அலர்ட் செய்த விஜய்

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என விஜய் தனது X பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News April 9, 2026
AK64 ஷூட்டிங்.. நாள் குறித்த அஜித்

இப்ப வருமோ எப்ப வருமோ என AK64 ஷூட்டிங் அப்டேட்டை எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. மே முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், கார் பந்தயங்களுக்கு இடையே ஷூட்டிங்கில் அஜித் பங்கேற்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் கிடைக்காததால், புரோடெக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தானே AK64 படத்தின் தயாரிப்பாளராக மாற அஜித் திட்டமிட்டுள்ளாராம்.


