News July 24, 2024
பட்ஜெட் விமர்சனமும் இபிஎஸ்ஸின் தேர்தல் கணக்கும்

பாஜகவின் பட்ஜெட்டை திமுகவுக்கு இணையாக அதிமுகவும் விமர்சித்து இருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. பட்ஜெட்டால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை எனக் கூறியதன் மூலம் இபிஎஸ் தொடர்ந்து தன்னை பாஜகவுக்கு எதிரான நிலையிலேயே நிலை நிறுத்தி காட்ட முனைகிறார். 2026 தேர்தலை இலக்கு வைத்து அவர் தனது ஒவ்வொரு நகர்வையும் முன்னெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 13, 2026
வங்கிக் கணக்கில் ₹5000 வந்தது.. இன்ப அதிர்ச்சி

தேர்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2025-ல் சம்பா பருவத்தில் உயர் விளைச்சல் ரக நெல் சாகுபடி செய்த 5,098 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹5,000 வீதம் ₹4 கோடி ஊக்கத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்த 296 விவசாயிகளுக்கு ₹25.5 லட்சம் ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
மார்க் சாதனையை முறியடித்த 22 வயது இந்தியர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூர்யா மிதா அமெரிக்காவில் 2023-ல் நண்பர்களுடன் சேர்ந்து Mercor என்ற AI கம்பெனியை தொடங்கினார். இந்த கம்பெனியின் மதிப்பு $10 பில்லியனாக ஆனதால், சூர்யாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு $2.2 பில்லியன் (₹18,000 கோடி) ஆனது. இந்நிலையில் 2026 Forbes லிஸ்டில் சூர்யா இளம் தொழிலதிபராக 22 வயதிலேயே பில்லியனராகி மார்க் சாதனையை முந்தியுள்ளார். மார்க் 23 வயதில் பில்லியனரானார்.
News March 13, 2026
ராமதாஸ் ஐகோர்ட்டில் அவசர முறையீடு

கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு உரிமையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், ஐகோர்ட்டை ராமதாஸ் நாடியுள்ளார். மேலும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்ததையும், அன்புமணி தரப்பு மறைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


