News July 24, 2024
மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இன்று காலை அவை கூடியதும், பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து, வெளிநடப்பும் செய்தனர்.
Similar News
News March 4, 2026
ரேபிடோ ஓட்டுநர் பெயரில் ₹300 கோடி.. சிக்கிய ஹவாலா கும்பல்

அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சம்பந்தப்பட்ட ₹550 கோடி ஹவாலா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதம் ₹10,000 சம்பாதிக்கும் ரேபிடோ ஓட்டுநரான பிரதீப் பெயரில் ₹300 கோடி வரவு வைக்கப்பட்டது ED-க்கு சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பான விசாரணையில், பிரதீப் தனது வங்கி கணக்கை ₹25,000-க்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 4, 2026
பஹல்காம் தாக்குதல் வழக்கில் சீனாவிடம் உதவி கேட்கும் NIA

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட GoPro Hero 12 Black ரக கேமராவை ஆய்வு செய்ததில், அது 2024 ஜன.30-ம் தேதி சீனாவின் டோங்குவான் பகுதியில் முதல்முதலாக பயன்படுத்தியதும், பின்னர் சீன விநியோகஸ்தர் மூலம் கேமரா கைமாறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சர்வதேச சட்ட உதவி கோரி சீன அதிகாரிகளுக்கு NIA கடிதம் அனுப்பியுள்ளது.
News March 4, 2026
சற்றுமுன்: 1,000 பேர் மரணம்.. கொடூரம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது . இதில் 181 பேர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். போரில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதால் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.


