News July 24, 2024
தங்கத்தின் மீதான வரி குறைப்பால் அரசுக்கு லாபம்?

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் நகை வாங்க தயங்கியதுடன், தங்க கடத்தலும் அதிகரித்தது. இந்நிலையில், இறக்குமதிக்கான சுங்க வரி 10%இல் இருந்து 5%ஆகவும், AIDC 5%இல் இருந்து 1%ஆகவும் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை கணிசமாக குறைவதால், மக்களிடம் ஆர்வம் அதிகரிப்பதோடு, கடத்தலும் வெகுவாக குறையும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
Similar News
News March 10, 2026
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.
News March 10, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? அண்ணாமலை கூறினார்

தவெகவுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உடனான கூட்டணி பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே இல்லை என விளக்கம் அளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக, AP DCM பவன் கல்யாண் மூலமாக NDA தரப்பு விஜய்யுடன் பேசி வருவதாக நேற்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்.. காரசார விவாதம்

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் லோக்சபாவில் விவாதத்திற்கு வந்துள்ளது. அப்போது பேசிய காங்., MP கே.சி.வேணுகோபால், பல ஆண்டுகளாக துணை சபாநாயகரை அரசு நியமிக்கவில்லை; இது அரசமைப்பில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான அவை நடவடிக்கைகளை தலைமை தாங்க ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


