News July 24, 2024
திருப்பூர் அருகே லாரி-கார் மோதி 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம், ஆலாம்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அவரது உறவினர்களுடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது ஊதியூர், நொச்சிபாளையம் அருகே இவர்களது கார் லாரி மீது மோதியதில் பெரியசாமி (56), ரஞ்சனி பிரியா (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 18, 2025
திருப்பூரில் 10th முடித்தால் இலவசம்! DONT MISS

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’CNC ஆப்பரேட்டர்’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. பெரும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரத்தின் ஆப்பரேட்டர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டு. இந்தப் பயிற்சிக்கு 10th படித்திருந்தாலே போதுமானது.இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. இதில் விண்ணப்பிக்க <
News August 18, 2025
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சமீர் அலாம்(34) என்பதும், அவரிடம் 2 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News August 17, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.