News July 24, 2024

இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை!

image

உலக நாடுகளின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 82வது இடத்தில் உள்ளதாக Henley Passport தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 58 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம். கென்யா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு பயணம் செய்து, பின் அந்நாட்டின் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். ரஷ்யா போன்ற 177 நாடுகளுக்கு விசா கட்டாயமாக தேவைப்படும்” என குறிப்பிட்டுள்ளது.

Similar News

News March 15, 2026

தாம்பரத்தில் டயாலிசிஸ் மையம் திறப்பு

image

தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மையம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை எம்.பி டி.ஆர். பாலு திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

image

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

News March 15, 2026

SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா தோல்வி

image

*மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஃபைனலில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது *சர்வதேச உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் 8.21 மீ நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார் *இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில், யூகி பாம்ப்ரி-கோரன்சன் இணை தோல்வி *ISL கால்பந்தில் பெங்களூரு-மோகன் பகான் இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

error: Content is protected !!