News July 24, 2024
தேர்தல் ரேஸில் டிரம்ப்பை முந்தும் கமலா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பைவிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தெரியவந்துள்ளது. ஜூலை 16ஆம் தேதி ராய்ட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்புக்கு (78) 38% ஆதரவும், கமலாவுக்கு (59) 42% ஆதரவும் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடிக்கு 8% செல்வாக்கு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 16, 2026
தமிழ்நாடு தேர்தல்.. சற்றுமுன் புதிய அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக பின்பற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. *அமைச்சர்கள் அரசு வாகனங்களை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த தடை. *தனியார் இடத்தில் உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் போஸ்டர், பேனர் வைக்கக்கூடாது. *தேர்தல் தொடர்பான புகாரை 1950 என்ற எண்ணில் தெரிவித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை. *5,173 பறக்கும் படைகள் களத்தில் உள்ளதாக ECI தெரிவித்துள்ளது.
News March 16, 2026
தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும்: மு.க.ஸ்டாலின்

பரப்புரையின்போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்று திமுக மா.செ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றும், கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைவாக பெற்ற இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சியினருடன் திமுகவினர் இணைந்து செயல்படவும் ஆலோசனை கூறியுள்ளார்.
News March 16, 2026
தேர்தல்: மதுபான கடை நேரம் குறைப்பு

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் குடோன்களில் இருந்து காலை 10 – மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மதுக்கடைகளும், 12 மணி வரை ரெஸ்ட்டோ பார்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


