News July 24, 2024
பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் வரி குறைப்பு?

முத்திரைத்தாள் வரி அதிகமாக இருப்பதே ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் புழக்கத்திற்கு முக்கிய காரணி என மத்திய அரசு நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்நிலையில், முத்திரைத்தாள் வரியை குறைக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண்கள் பெயரில் சொத்து வாங்கும் போது, வரியை குறைக்க பரிசீலிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
நடிகர் ஹரி முரளி தற்கொலை.. சோகமான தகவல்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட <<19362357>>இளம் நடிகர் ஹரி முரளி(27)<<>>, தற்கொலை செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விபரீத முடிவுக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஹரி முரளி இளம் வயதிலேயே தற்கொலை முடிவை எடுத்திருப்பது பெரும் சோகம்.
News March 12, 2026
திருட்டு என்ஜின் தான் திமுக அரசு: TTV

PM மோடி கூறிய டபுள் இன்ஜின் அரசை டப்பா இன்ஜின் என விமர்சித்திருந்த CM ஸ்டாலின், தமிழகத்தில் அது எடுபடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு மத்திய அரசு உதவும் என்பதை தான் டபுள் இன்ஜின் அரசு என PM மோடி குறிப்பிட்டதாக TTV விளக்கியுள்ளார். மேலும், திமுக அரசை திருட்டு ரயில் இன்ஜின்; வித் அவுட் டிக்கெட் இன்ஜின் என்று அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

இந்தியாவில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதால், உள்நாட்டு LPG உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மூன்றே நாள்களில் 10%-ல் இருந்து 25% ஆக LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபடவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளது. SHARE IT


