News July 24, 2024
வெள்ளியின் விலை மேலும் சரிவு

பட்ஜெட்டில் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து, இரண்டாவது நாளாக வெள்ளி விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ₹92க்கும், கிலோவுக்கு ₹500 குறைந்து ஒரு கிலோ ₹92,000க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 2 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹4,000 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News March 12, 2026
தமிழக கவர்னராக R.V.அர்லேக்கர் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை HC-ன் தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரளாவின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
News March 12, 2026
பொதுத்தேர்வு மையங்களில் மேலும் கட்டுப்பாடு!

சில நாள்கள் முன், திருநெல்வேலியில் ஜெராக்ஸ் கடையில் மினி ஜெராக்ஸ் எடுத்து மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகள் கடைகளில் நிகழ்ந்தால், உடனடியாக கலெக்டர்களிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
News March 12, 2026
இனி டெலிகிராமில் புது படங்களை பார்க்க முடியாது..

OTT-க்கு பணமில்லை என்பதால் பெரும்பாலானோர் புது படங்களை டெலிகிராமில் பார்க்கின்றனர். இதனால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி ஜியோ சினிமா, அமேசான் பிரைம் நிறுவனங்கள் புகார் எழுப்பியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் படங்கள் பதிவேற்றும் 3,100 சேனல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்கள் கருத்து?


