News July 24, 2024
F&O டிரேடர்களுக்கு ஷாக் கொடுத்த பட்ஜெட்?

பங்குச்சந்தையில் ஆபத்து மிகுந்த ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் (F&O) வர்த்தகம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை தரவுகள் காட்டுகின்றன. இந்நிலையில், சில்லறை முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், F&O வர்த்தகத்தை குறைக்கும் நோக்கத்திலும் ஆப்ஷன் மீதான STT வரியை 0.0625%இல் இருந்து 0.1%ஆகவும், ஃப்யூச்சர்ஸ் மீதான STT வரியை 0.1% இல் இருந்து 0.2%ஆக மத்திய அரசு பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளது.
Similar News
News March 5, 2026
Swiggy, Zomato-வுக்கு போட்டியாக வந்தாச்சு Rapido-வின் Ownly!

பெங்களூருவில் Ownly செயலியின் மூலம் உணவு டெலிவரி மார்க்கெட்டில் Rapido கால்பதித்துள்ளது. ஹோட்டல் பில்லுடன் சேவை கட்டணமும் அதிகமாக இருப்பதால், மொத்த பில் அதிகமாக இருப்பதாக Zomato, Swiggy மீது தொடர் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான், Ownly ஆப் சேவை கட்டணமே இல்லாமல் அறிமுகமாகியுள்ளது. பெங்களூருவில் தங்களது மாடல் ஹிட்டானால், பிற நகரங்களுக்கும் சேவையை விரிவுப்படுத்தவும் Rapido திட்டமிட்டுள்ளதாம்.
News March 5, 2026
கடைசி நேரத்தில் மாறியது.. தமிழக அரசியலில் பரபரப்பு

பாமகவை தனது கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை தேர்தலில் அன்புமணியும், ராஜ்யசபா தேர்தலில் சௌமியாவும் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. இன்று காலை வரை இதுதான் நிலைமை. ஆனால், கடைசி நேரத்தில் பெரிய ட்விஸ்ட்டாக அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், மாற்று வேட்பாளராக செளமியா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
News March 5, 2026
கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் எப்படி வந்தது?

திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு போன்றோர் ராஜ்யசபா சீட் கேட்டு டெல்லியில் முகாமிட்டனர். ஆனால், காங்., தலைமையோ, சீனியர்களை விட, தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய தலைவரை அடையாளப்படுத்த விரும்பியது. இதனால், ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் டெல்லியில் தமிழகத்தின் குரலாக இவர் ஒலிப்பார் என்றும் கூறப்படுகிறது.


