News July 24, 2024
குலதெய்வக் கோயிலில் நடிகர் தனுஷ் வழிபாடு

நடிகர் தனுஷ் தேனியில் உள்ள தன் குலதெய்வமான கருப்பசாமி & கஸ்தூரியம்மன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டுள்ளார். அத்துடன், ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ராயன்’ திரைப்படம் வெற்றிப்பெற வேண்டி அவர் சிறப்பு பூஜைகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த குலதெய்வ கோயிலில் அமர்ந்து தியானம் செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Similar News
News March 14, 2026
அண்ணாமலை கேட்கும் தொகுதியை கொடுக்காத EPS

வரும் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் தர முடியும்; வேண்டுமானால், கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் தொகுதியில் போட்டியிடட்டும் என EPS கூறுகிறாராம். அதேபோல், வேளச்சேரியில் போட்டியிட தமிழிசை விரும்பும் நிலையில், விருகம்பாக்கம் (அ) மயிலாப்பூர் தொகுதியை கொடுக்க EPS முன்வந்துள்ளாராம்.
News March 14, 2026
தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

TN உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை வரை ECI அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல், பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதனால், நாளை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பில்லை; 16-ம் தேதிக்கு பிறகே அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


