News July 24, 2024

மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை: நிர்மலா

image

பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டால், நிதி வழங்கப்படவில்லை என்று அர்த்தமில்லை எனக் கூறிய அவர், NDA கூட்டணிக் கட்சிகள் ஆளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து மாநிலங்களுக்கும் ₹1.5 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Similar News

News March 18, 2026

வாரிசு அரசியலுக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி: R.B.உதயகுமார்

image

மன்னராட்சியின் சிந்தனையில் இருக்கிற திமுக ஆட்சிக்கு நாம் முடிவுரை எழுத வேண்டும் என R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு இன்றைக்கு முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்படுதை மக்கள் உன்னிப்பாக கவனிப்பதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 இருக்கும் எனவும் கூறியுள்ளார். திமுகவில் வாரிசுகள் மட்டுமே அதிகார மையங்களாக உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 18, 2026

புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.

News March 18, 2026

UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

போர் பதற்றத்தில் உள்ள UAE-ன் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்திடம் PM மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட PM மோடியும், UAE அதிபரும் ஒப்புக்கொண்டனர். UAE மீது நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களுக்கும் மோடி தனது கண்டனங்களை பதிவு செய்தார்.

error: Content is protected !!