News July 24, 2024
இந்தியாவின் ஜூனியர் – சீனியர்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவுள்ள பிற நாடுகளைப் போலவே இந்திய அணியிலும், மிக இளம் & மூத்த போட்டியாளர்கள் உள்ளனர். நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு (14 வயது, 2 மாதம்), களமிறங்கும் இளம் இந்திய நட்சத்திரமாகவும், டென்னிஸ் வீரர் போபண்ணா (44 வயது, 4 மாதம்) மூத்த இந்திய நட்சத்திரமாகவும் திகழ்கின்றனர். இவரை தவிர, பஜன் கவுர்-18 (வில்வித்தை), ஈஷா-19 (துப்பாக்கி சுடுதல்) இளம் வயதில் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News March 28, 2026
விஜய் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தது ஏன்?

தேர்தல் அதிகாரியிடமிருந்து அனுமதி பெற்றபோதிலும், பிரசாரத்திற்கு திட்டமிட்ட இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். விஜய் மீதான அச்சத்தால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அவரை முடக்க நினைக்கின்றனர் என்றார். மேற்குவங்கத்தில் 600 அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்த ECI, TN-ல் அப்படி எதுவும் செய்யவில்லை; எனவேதான் விஜய் நேரில் சென்று புகாரளித்ததாக தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
ரஜினியின் பஞ்ச் டயலாக்கை சொன்ன ஸ்டாலின்!

திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை CM ஸ்டாலின் சற்று முன் வெளியிட்டார். அப்போது வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் திமுகவுக்கு முன் அதிமுக முந்திக்கொண்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினியின் பஞ்ச் டயலாக்கான ‘நாங்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவோம்’ என்பதை அவர் கூற, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் கை தட்டி வரவேற்றனர்.
News March 28, 2026
டாஸ்மாக் 6 நாள்கள் விடுமுறை

தமிழக தேர்தலையொட்டி 4 நாள்கள் (ஏப்.21, 22, 23, மே 4) தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மஹாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 31-ம் தேதி டாஸ்மாக் விடுமுறையாகும். அதேபோல், உழைப்பாளர் தினமான மே 1 அன்றும் மதுக்கடைகள் இயங்காது. இதனால், சுமார் 1 மாத காலக்கட்டத்தில் 6 நாள்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்காது. SHARE IT


