News July 24, 2024
கோவை அணி அபார வெற்றி

கோவை-மதுரை அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 163/9 ரன்கள் குவித்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோவை அணி சார்பில் ஷாருக்கான் 51 ரன்களும், கௌதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டுகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
Similar News
News March 6, 2026
மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலகு, மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ளவர்கள் வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை “திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், 2-வது மாடி, ஆட்சியர் அலுவலகம், கோவை – 18” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம். இப்பணிக்கு மாத ஊதியமாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
நாம் தமிழர் கட்சியினர் கைது

கோவையில் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறித் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவில் பெரும் போராட்டங்களுக்கு இடையே இப்படம் வெளியான நிலையில், கோவையில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.


