News July 24, 2024
மகளிா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி சமூக நலம், மகளிா் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தேனி ஜெயக்குமாா் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மற்றும் அரசின் எந்த மாத உதவித் தொகையும் பெறாத 21-55 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த மகளிா் உதவித் தொகையைப் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறவும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
புதுச்சேரி: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
புதுச்சேரி: பிரதமர் பதில் அளிக்கவில்லை – முன்னாள் முதல்வர்

புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர் பதில் அளிக்காததால், முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணியிலிருந்து, வெளியே வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை வரவேற்கத்தக்கது என்றாலும், மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
News March 4, 2026
புதுச்சேரி: கலைஞர்களை ஊக்குவிக்க பிஎம் ஏக்தா மால்

புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஷீலா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.128 கோடியில் பி.எம் ஏக்தா மால், 4.7 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.64 கோடி நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளது. இங்கு பிரத்யேக கண்காட்சி அரங்குகள் மற்றும் கலாச்சார மையங்கள் இடம்பெறும் என உள்ளது.


