News July 24, 2024

திமுக எம்எல்ஏ மகன் நேரில் ஆஜராக உத்தரவு

image

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இவ்வழக்கில் இருவருக்கும் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இருவரும் ஆக.9ல் நேரில் ஆஜராக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 22, 2026

கிரிப்டோ கரன்சி முதலீடு.. ₹30 கோடி மோசடி

image

சென்னையில் கிரிப்டோ முதலீடு என்ற பெயரில் ₹30 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. TFT Blockchain என்ற நிறுவனம் கிரிப்டோவில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20% வரை நிலையான வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூற்றுக்கணக்கானவர்களை ஏமாற்றியது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. ஆருத்ரா கோல்டு, நியோ மேக்ஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளை தொடர்ந்து, இந்த கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News March 22, 2026

தமிழக வளர்ச்சிக்கு திராவிட மாடல் தேவை: CM ஸ்டாலின்

image

அடுத்த 5 ஆண்டுகளில் துறைவாரியாக தான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகள் குறித்து CM ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட 14 இலக்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

அதிமுகவுக்கு அவல நிலை: OPS

image

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித்ஷாவை சந்தித்த EPS-ஐ, திமுக நிர்வாகி OPS மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் காலத்தில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்து தான் கூட்டணி பேசுவார்கள்; தற்போது எல்லோரும் டெல்லி செல்லக் கூடிய ஒரு அவல நிலையை கட்சிக்கு ஏற்படுத்தி உள்ளார்கள் என தெரிவித்துள்ளார். திமுகவில் சேர்வதற்கு முன்பாக OPS பலமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!