News July 23, 2024

திருவள்ளூரில் 65 காலிப் பணியிடங்கள்

image

இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆவடி கோட்டத்தில் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்புமுள்ளவர்கள் ஆக.12ஆம் தேதிக்குள் rrccr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (13/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 13, 2025

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 56 புகார் மனு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 13.08.2025 நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தும், 56 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாார்‌.

News August 13, 2025

ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் குறித்து கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில், 2025-2026ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அவர்கள், அனைத்துத் துறை அலுவலர்களும் பணியாளர்களும் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!