News July 23, 2024
முதிர்வுத்தொகை பெற ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரத்தில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில், தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத்தொகை பெறப்படாமல் உள்ள பெண் குழந்தைகள், பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட உள்ளது. மேலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ கோதண்டநாடார் குண்சீலியம்மள் மண்டபம், ஸ்ரீபெரும்புதூர்.
▶️ சிங்கம் செட்டி சாரிட்டீஸ் மண்டபம், காஞ்சிபுரம்.
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.
▶️ செல்வராணி மண்டபம் குன்றத்தூர்.
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். SHARE பண்ணுங்க.
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் மூலம், சாலையோர உணவு வியாபாரிகளுக்கு 50 வியாபார வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியில் இருந்து பெறப்பட்ட இந்த வாகனங்களை, குலுக்கல் முறையில் தகுதியான 50 வியாபாரிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
News August 28, 2025
பரந்தூர் விமான நிலையம்: சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி மாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்கிறார். இதில் அப்பகுதி கிராம மக்களும் கலந்துகொள்ள உள்ளனர்.