News July 23, 2024
பேனர் வைப்பவர்களுக்கு சப் கலெக்டர் எச்சரிக்கை

புதுவையில் சட்ட விரோதமான பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோத பேனர்கள் குறித்து போட்டோ எடுத்து 94433 83418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அனுப்பலாம் எனவும் போட்டோ எடுக்கப் பட்ட தேதி, நேரம், சம்பந்தப்பட்ட இடம் குறித்த விபரங்கள் போட்டோவில் இடம் பெற வேண்டும். மேலும் பேனர் வைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.
Similar News
News August 14, 2025
ரெஸ்டோபார்களையும் மூட வேண்டும்; ராமதாஸ் அறிக்கை

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதும் வருத்தத்திற்குரியது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புனிதத் தன்மை, கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில் அனைத்து ரெஸ்டோ பார்களை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
புதுச்சேரி வாகனங்கள் டில்லி செல்ல தடை!

“தேசிய தலைநகரான டில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்த காற்று தர மேலாண்மை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்து போக்குவரத்து மற்றும் வணிக பொருட்களை ஏற்றிச் செல்லும் பழைய வாகனங்கள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் டில்லிக்குள் நுழைய, கட்டாயமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
புதுவைகள் சுகாதார பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மகப்பேறு உதவியாளர், மருந்தாளுநர், இசிஜி தொழில்நுட்ப வல்லுநர், அறுவை சிகிச்சை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்விற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.