News July 22, 2024
நெமிலி தாலுகா கிராமங்களில் தங்கும் ஆட்சியர்

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற இருக்கிறார். அப்போது பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், கழிவுநீர், கால்வாய், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். அன்று இரவு ஏதேனும் ஊரில் தங்கி இருந்து மறுநாள் காலை நெமிலி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்கிறார்.
Similar News
News September 12, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)
News September 12, 2025
ராணிப்பேட்டையில் கேன் தண்ணீர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
ராணிப்பேட்டையில் இலவச குரூப் 2 மாதிரி தேர்வு

இன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வு வருகிற செப்.13 மற்றும் செப்.20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் 04172 – 291400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்