News July 22, 2024
பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் 28 நபர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (CCSE-II (Group IIA SERVICES) மூலம் நேரடியாக நியமன உதவியாளராக, மாவட்ட வருவாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வான 28 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி அறிவுரை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .
Similar News
News August 8, 2025
திருவள்ளூர்: முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யும் விநோதம்

திருத்தணி மலையில் உள்ள கருவறைக்கு பின்புறம் சுவற்றில் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி திருவாதிரையில் வென்னீரால் அபிஷேகம் நடைபெறுகிறது. குளிர்காலம் என்பதால் குழந்தை முருகன் மீதான அன்பினால் இந்த வெந்நீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக கடவுளுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுவது இங்கு தான். இந்த பாலமுருகனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
திருவள்ளூரில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!
News August 8, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை…

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். சென்னை வட்டாரத்திற்கு 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <