News July 22, 2024

அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

image

தமிழகத்தில் 3 வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து, அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ரவி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News September 12, 2025

ராணிப்பேட்டை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்<<>> / மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 12, 2025

அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு ரூ.6.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் நேற்று (11.9.2025) முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News September 12, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)

error: Content is protected !!