News July 22, 2024

இளைஞர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு

image

தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க் ஷாப்பில் பணிபுரிய 1,337 பேர் அப்ரன்டீஸ் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது தொழிற்பயிற்சி முடித் தவர்கள் https://sr.indianrailways.in என்ற இணையதள முகவரியில் நாளை (ஜூலை.22) முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு கிடையாது.

Similar News

News July 8, 2025

‘போலீஸ்கிட்ட போட்டு கொடுத்தவருக்கு’ வெட்டு

image

மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 55. இவர் வீட்டருகே பராமரிப்பற்ற கட்டடம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு பாண்டி தொடர்ந்து தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்றவர்கள் இரவு வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பாண்டி, மகன் கார்த்திக்கை 35, பட்டா கத்தியால் வெட்டி, ‘போலீஸ்கிட்டே போட்டு கொடுக்குறீயா’ என மிரட்டியுள்ளனர்.

News July 8, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு – காவல்துறை விளக்கம்

image

மதுரை சோலை அழகுபுரத்தில், கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு என்று இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், காவல்துறை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. சொத்துத் தகராறில் கார்த்திக் மற்றும் அவரது மாமா நாகரத்தினம் என்பவருக்கும் இடையே நடந்த பிரச்சினையில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!