News July 22, 2024
கரூரில் முதல்வர் திறப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர் மலை சுரும்பார் குழலி சமேத இரத்தினகிரிஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற புதன்கிழமை அன்று வடவூர்தி (ரோப் கார்) சேவையை, சென்னையில் இருந்து முதல்வர் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து, வடவூர்தியை பயன்படுத்தி சுரும்பார்குழலி அருள் பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News April 21, 2025
ரூ 46 லட்சம் மோசடி தம்பதியினர் மீது வழக்கு பதிவு

மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோர்ந்த சண்முகசுந்தரம் (40) மனைவி சசிகலா(38) தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று அதற்கு வட்டி கட்டவில்லை. இதில் நிதி நிறுவனம் மேலாளர் வீரமணி (39) வட்டியோடு சேர்த்து ரூ 46.21 லட்சம் கட்ட வேண்டும் அதற்கு தம்பதியினர் செலுத்த முடியாது என தெரிவித்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசில் மேலாளர் அளித்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 21, 2025
கரூர்: கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் காலபைரவர்

கரூர்: தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.