News July 22, 2024
அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பூவாசகுடி செந்தலை அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் குதிரை எடுப்பு விழா மற்றும் கிடா வெட்டு பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு மேளதாளம் முழங்க குதிரை சிலைகளை எடுத்து வந்தனர். பின்னர் கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. இரவு அய்யனார் பூரண புஷ்கலை, விநாயகர், பெரிய கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது.
Similar News
News November 5, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.04) இரவு 10 மணி முதல் இன்று (நவ.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 4, 2025
புதுக்கோட்டை: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
News November 4, 2025
புதுக்கோட்டை: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


