News July 21, 2024

அதானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான கௌதம் அதானி, கடந்த நிதியாண்டில் மட்டும் ₹9.26 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். இது சக நிறுவன CEOக்களின் சம்பளத்தை விட குறைவு. 10 நிறுவனங்களுக்கு மேல் அதானி தன்வசம் வைத்திருக்கும் நிலையில், இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு பங்கு விலையை மையப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 28, 2025

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

image

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையம் ஒன்றியம் கல்வராயன் மலை, கிராங்காடு திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உறவினர் ராஜமாணிக்கம், ஜெயக்கொடி, பழனிசாமி மற்றும் குழந்தைவேல் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 28, 2025

DKS-ஐ மறைமுகமாக தாக்கிய சித்தராமையா

image

தன்னை CM ஆக்க <<18401800>>காங்., வாக்கு கொடுத்தது<<>> என்பதுபோல பதிவிட்டு பிறகு அதை நீக்கியிருந்தார் டி.கே.சிவக்குமார். இந்நிலையில், கர்நாடகா மக்கள் கொடுத்த பொறுப்பு 5 ஆண்டுகளுக்கானது எனவும், காங்.,ம் தானும் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி வருவதாகவும் சித்தராமையா X-ல் பதிவிட்டிருக்கிறார். மேலும், கர்நாடகாவுக்கு காங்., கொடுத்தது வெறும் வாக்கு அல்ல, அது இந்த உலகத்தை விட பெரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

image

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.

error: Content is protected !!