News July 21, 2024
ஆசிரியர் திலகம் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குமரி அறிவியல் பேரவை சார்பில் வருடம் தோறும் ஆசிரியர் திலகம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2023-24 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 9942758333 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது mullanchery@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News November 9, 2025
குமரி: தந்தையை தீவைத்துக் கொளுத்திய மகன்

இடைக்கோடு அருகே முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணிக்கும் (70), இவரது மகன் சுனில் குமாருக்கும் (37)இடையே தகராறு ஏற்பட்டது. இதில் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் திரவத்தை எடுத்து ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 9, 2025
BREAKING: குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதற்கு ஏற்ப உங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. இதேபோல் குமரி மாவட்டத்திற்கு நவ.12, 13 அன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 9, 2025
குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


