News July 21, 2024

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 13, 2025

நெல்லை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

நெல்லை – தாம்பரம் ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்

image

நெல்லை வழியாக சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் வருகிற 17ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8:20 மணிக்கு புறப்படும். அந்த ரயில் மறு மார்க்கத்தில் 18ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக இந்த மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ளது.

News September 13, 2025

நெல்லை: அரசு வேலை பணமோசடி – தம்பதி மீது வழக்கு

image

பாளையங்கெட்டிகுளம் காமராஜ் நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் தனது மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காட்டாங்குளியை சேர்ந்த காந்திராஜ் அவரது மனைவி உஷா ராணியிடம் 2 லட்சம் அளித்தார். அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதுக்குறித்து அந்தோணி ராஜ் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் காந்திராஜ், உஷாராணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!