News July 21, 2024
நெல்லை டிஎஸ்பி திடீர் இடமாற்றம்

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த சில தினங்களாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி புறநகர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக பணி செய்து வந்த பாலசுந்தரம் மதுரை ஊமச்சிகுளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
நெல்லை – தாம்பரம் ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்

நெல்லை வழியாக சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் வருகிற 17ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8:20 மணிக்கு புறப்படும். அந்த ரயில் மறு மார்க்கத்தில் 18ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக இந்த மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ளது.
News September 13, 2025
நெல்லை: அரசு வேலை பணமோசடி – தம்பதி மீது வழக்கு

பாளையங்கெட்டிகுளம் காமராஜ் நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் தனது மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காட்டாங்குளியை சேர்ந்த காந்திராஜ் அவரது மனைவி உஷா ராணியிடம் 2 லட்சம் அளித்தார். அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதுக்குறித்து அந்தோணி ராஜ் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் காந்திராஜ், உஷாராணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
News September 13, 2025
நெல்லை: உங்க நீதிமன்ற CASE நிலை என்ன??

நெல்லை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..