News July 20, 2024
மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
TRAI பெயரில் போலி IVR மோசடி எச்சரிக்கை!

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. TRAI அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி போலி IVR அழைப்புகள் செய்து, “உங்கள் மொபைல் எண் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படுகிறது, இல்லையெனில் முடக்கப்படும்” என மிரட்டி மோசடி செய்கிறார்கள். TRAI ஒருபோதும் OTP, தனிப்பட்ட தகவல், எண் சரிபார்ப்பு அல்லது துண்டிப்பு குறித்து அழைப்போ, செய்தியோ அனுப்பாது.
News August 31, 2025
மதுரை போலீஸ் எச்சரிக்கை: “பேடிஎம்” போலி IVR அழைப்புகள்

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. “பேடிஎம்” வாடிக்கையாளர் சேவை என போலி IVR அழைப்புகள் செய்து OTP கேட்டுக்கொள்வது மோசடி என தெரிவித்துள்ளது. OTP பகிர்ந்தால் கணக்கிலிருந்து பணம் பறிக்கப்படலாம். OTP, PIN போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம், சந்தேக அழைப்புகளை உடனே துண்டித்து புகார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 30, 2025
மதுரை மாநகராட்சி நடைபாதை விற்பனைக்குழு தேர்தல்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஆறு பேர் கொண்ட விற்பனை குழு தேர்ந்தெடுப்பிற்கு செப்.29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பான விவரங்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வேட்புமனு தாக்கல் துவக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.