News July 19, 2024
17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 24.7.2024-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SSC CGL-2024 மொத்தம் 17,727 காலிப் பணியிடங்கள். ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் 25.7.24. விண்ணப்பத் திருத்தம் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 10 &11. முதல்நிலை கணினி வழி தேர்வு: செப். – அக்டோபர், இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பர். மேலும், விவரங்களை <
Similar News
News November 26, 2025
ராணுவ வீரர் மனைவி கொலை; ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

காளையார்கோவிலில், கடந்த வருடம் ராணுவ வீரர் மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மை குற்றவாளி தினேஷ்குமார் என்பவர் சிக்காததால், அப்பாவியான ராஜகோபாலன் மீது காளையார்கோவில் காவல்துறை வழக்கு பதிந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜகோபாலன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
News November 26, 2025
அரசியலமைப்பின் கையெழுத்து பிரதி இருப்பது தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கையெழுத்து பிரதி இன்றும் பாதுகாக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? ஆம், நாடாளுமன்றத்தில், நைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட கண்ணாடி குமிழில் அது பாதுகாக்கப்படுகிறது. அரசியலமைப்பு கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளதால், அது விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும். எனவே அதை தடுக்கவும், சூரிய ஒளி மற்றும் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்கவும் நைட்ரஜன் வாயு கொண்டு பராமரிக்கப்படுகிறது.
News November 26, 2025
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இந்நாளில் அதன் மாண்பையும், அது வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார். இதுபற்றி X-ல் அவர், தவெகவின் கொள்கை தலைவர் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகிலேயே சிறந்த அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி மக்களுக்கு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அரசியலமைப்பானது, வேற்றுமையில் ஒற்றுமை காண வழிவகை செய்துள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.


