News July 19, 2024

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரித்து ஆரஞ்சு நிற அலர்ட் விடுத்துள்ளது. அதோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு.

Similar News

News November 26, 2025

கோவை வரும் துணை முதல்வர்

image

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (26-11-2025) பிற்பகல் 02:30 மணிக்கு, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கோவை விமான நிலையம் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, அவருக்கு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே இதில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 26, 2025

பேங்க் அக்கவுண்ட் இல்லாமலும் UPI-யில் பணம் அனுப்பலாம்!

image

வங்கி கணக்கு இல்லாதவர்களும் பணம் அனுப்பும் ‘UPI Circle: Full Delegation’ என்ற வசதியை BHIM கொண்டு வந்துள்ளது *UPI ஆப்பில், வங்கி கணக்கு உள்ள Primary Users, ‘UPI Circle’ ஆப்ஷனுக்கு செல்லவும் *அதில், வங்கி கணக்கு இல்லாத 5 பேரை Secondary User-களாக சேர்க்கவும் *Secondary User-களுக்கு ஒரு VPA ID உருவாகும் *அதன் மூலம் அவர்கள் பரிவர்த்தனை செய்யலாம் *அதிகபட்சமாக ₹15,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.

News November 26, 2025

செங்கோட்டையன் முன் இருக்கும் 3 வாய்ப்புகள்!

image

MLA பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையனுக்கு தற்போது 3 வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.1. விஜய் கட்சியில் இணைவது. 2. திமுகவின் அழைப்பை ஏற்று அங்கு செல்வது(நீண்ட காலமாக அதிமுகவில் பயணித்துவிட்டு திமுகவுக்கு சென்றால் எதிர்மறையான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தலாம்) 3. தனியாக கட்சி தொடங்குவது. இதில், முதல் வாய்ப்பையே அவர் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!