News July 19, 2024
ஒரு நபரால் முடங்கிய உலகம்

CrowdStrike என்னும் இயங்குதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக ஐடி பணிகள், விமான சேவைகள், வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாரோ ஒரு Crowdstrike ஊழியர் தவறான ப்ரோகிராமை அப்டேட் செய்ததே இந்த பிரச்னைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தேடி வருகிறது.
Similar News
News November 26, 2025
செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.
News November 26, 2025
யார் இந்த பொல்லான்?

ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி கரையோர போர்(1801), சென்னிமலை போர்(1802), அரச்சலுார் போர்(1803) ஆகியவற்றில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான்தான் முக்கிய காரணம். ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவிய பொல்லான் தந்திரங்களை அறிந்து, சின்னமலையை வெற்றிபெற வைத்தார். சிறந்த வாள்வீச்சு வீரராக திகழ்ந்த பொல்லான், 1805-ல் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
News November 26, 2025
ராஜினாமா செய்த கையோடு செங்கோட்டையன் சம்பவம்

MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறார். TVK-வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவியை ராஜினாமா செய்த கையோடு, சபாநாயகர் அறையிலேயே சேகர் பாபு – செங்கோட்டையன் பேசி வருகின்றனர். ஒருவேளை திமுகவில் இணைந்தால் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்பதால், ஈரோடு முகமாக இருக்கும் அமைச்சர் முத்துசாமியை திமுக தலைமை சமாதானம் செய்கிறாதாம்.


