News July 19, 2024
கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்கலம், கருனாபுரம், சடையம்பட்டு, சோமண்டார்குடி, நத்தமேடு, அக்கரைபாளையம், நல்லாத்தூர் என கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துணை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்!

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் நேற்று (ஜூலை 10) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த சண்டையை தடுக்க சென்ற ரமேஷ் என்பவரையும் விஜய் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விஜய் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News July 11, 2025
திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.