News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

புதுக்கோட்டை: போன் தொலைந்தால் இத பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 18, 2025

புதுக்கோட்டை: மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில், குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக 18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி 18ம் வார்டு பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமான் நகர் சமுதாயக் கூடத்திலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பிலியவயல் ஊராட்சி வம்பரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வசந்தம் திருமண மகாலில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!