News July 19, 2024
நாளை ரேஷன் கடைகள் இயங்காது

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
Similar News
News August 14, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News August 13, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (13/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 13, 2025
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 56 புகார் மனு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 13.08.2025 நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தும், 56 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாார்.