News July 19, 2024
புதிய ஆட்சியருக்கு வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக சந்திராகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் துணை ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Similar News
News September 13, 2025
ராணிப்பேட்டை: சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

ராணிப்பேட்டை, வாலாஜாவைச் சேர்ந்த செந்தில்நாதன் (44) என்பவர் டியூஷனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த அவரை, திருச்செந்தூரில் சாமியார் வேடத்தில் திரிந்தபோது போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
News September 13, 2025
அண்ணல் அம்பேத்கர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் நபர்களிடம் இருந்து, அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருது பெற விரும்பும் நபர்கள், விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும்.
News September 12, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100