News July 18, 2024
காரைக்காலில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்

காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் இன்று மதகடியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதில் விடுபட்ட 424 பேருக்கும் இன்சூரன்ஸ் தொகையை பெற்றுக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Similar News
News August 14, 2025
புதுவை: மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, மாசாலா பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 88704 97520, 0413-2246500 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News August 14, 2025
புதுவை: இளநிலை மருத்துவ படிப்பு இறுதி தரவரிசை வெளியீடு

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தேசிய சுயநிதி ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு இடங்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு வீரர்கள் 3 அசல் ஆவணங்களுடன் சென்டாக் அலுவலகம் வரவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
புதுவையுடன் இந்த பகுதி இணைந்தது எப்படி?

காரைக்கால், மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். பிரெஞ்ச் கவர்னராக இருந்த தூப்ளே, இதனைச் சுற்றியுள்ள ஊர்களை விலைக்கு வாங்கி விரிவாக்கம் செய்தார். இதற்கு முக்கிய காரணம் பிரஞ்ச் அரசில் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார். இவருடைய புத்திக்கூர்மையால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.