News July 18, 2024

வங்கியில் சமூக சேவை பயிற்சி..!

image

மதுரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் சமூக பயிற்சி பெற்றனர். கடந்த 2 ஆண்டு கால பயிற்சியில் வாடிக்கையாளர்களுக்கான சமூக சேவை, வாடிக்கையாளர்களை அணுகு முறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு இன்று பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

Similar News

News July 8, 2025

மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்றில் இன்று.!

image

1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கோயில்களில் நுழைய விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த புரட்சிகர நிகழ்வு 86வது ஆண்டை நிறைவு செய்து இன்றும் மதுரையில் நடைபெற்ற மாபெரும் புரட்சியாக கருதப்படுகிறது.

News July 8, 2025

மதுரையில் ரூ.37 ஆயிரத்தில் வேலை வாய்ப்பு

image

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் SHRI திட்டத்தின் கீழ் நடைபெறும் “மதுரையின் சித்திரை விழா ஆடைகள், நடனங்கள் மற்றும் சடங்குகளை பாதுகாப்பதற்கான ஆவணப்படுத்தல் மற்றும் வகைப்பாடு” என்ற ஆராய்ச்சி திட்டத்திற்காக, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (JRF) மற்றும் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்/புலத் தொழிலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!