News July 18, 2024
காதில் பேண்டேஜ் அணிந்து வந்த தொண்டர்கள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவரது வலதுபக்க காது காயமடைந்தது. இதனையடுத்து அவர் பேண்டேஜ் அணிந்து பொதுக்கூட்டங்களில் தோன்றினார். இதற்கு ஆதரவளிக்கும் விதமாக குடியரசுக் கட்சி தொண்டர்களும் காதில் பேண்டேஜ் அணிந்துகொண்டு பிரசாரக் கூட்டங்களுக்கு வருகின்றனர். இதனால் காதில் பேண்டேஜ் அணிவது தற்போது அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Similar News
News November 26, 2025
புதுச்சேரியிலும் கால் பதிக்கும் விஜய்.. டிச.5-ல் ரோடு ஷோ

புதுச்சேரியில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றாலும், புஸ்ஸி ஆனந்தின் சொந்த ஊரும் இதுதான். இதனால், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலிலும் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், டிச.5-ம் தேதி காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை (தமிழ்நாடு எல்லை ஆரம்பத்தில் இருந்து புதுச்சேரி எல்லை முடிவு வரை) ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி கேட்டுள்ளார்.
News November 26, 2025
FLASH: ஜெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் இன்று(நவ.26) வர்த்தகம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,253 புள்ளிகளிலும், நிஃப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 26,095 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. JSW Steel, Adani Ports, Trent, TMPV, Axis Bank நிறுவனங்களின் பங்குகள் 2 – 4% உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 26, 2025
5 விக்கெட்கள் காலி.. தடுமாறும் இந்தியா

549 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விக்கெட்களை இந்தியா இழந்து வருகிறது. குல்தீப் 5, கேப்டன் பண்ட் 13, ஜுரேல் 2 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளனர். இந்திய அணி தற்போது 60/5 எடுத்துள்ளது. களத்தில் சுதர்சன் 8, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


