News July 18, 2024
வெற்றி: நெல்லை மாணவர்கள் அசத்தல்

மாவட்ட அளவில் நடைபெற்ற ‘அட்டையா பட்டயா’ விளையாட்டுப் போட்டியில், பேட்டையை அடுத்துள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியை ரோகிணி வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கு மாணவர்கள் சுதாகர், சூர்யா, இசை, கார்த்தி, சுரேஷ்குமார், தரணி, விஜய் ஆகியோர் தேர்வாகியதாக உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை தெரிவித்தார்.
Similar News
News September 13, 2025
நெல்லை:பாலத்தில் தூங்குபவர்களை தடுக்க முயற்சி

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக திருவள்ளுவர் இரண்டு அடுக்கு மேம்பாலம் உள்ளது. கீழ்பாலத்தில் உள்ள சுவர் விளிம்புகளில் பலர் ஆபத்தை உணராமல் படுத்து தூங்குகின்றனர். இதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
நெல்லை: மண்டகப்படி நிர்வாகி தற்கொலை

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருமலை நம்பி கோயில் மலையடிப்புதூர் மண்டகப்படி விழா குழு நிர்வாகியாக உள்ளார். இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News September 13, 2025
நெல்லை: தேர்வு இல்லாமல் SBI வேலை – APPLY!

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <